சினிமா
நடிகை மீனாவின் பங்களாவை வாங்கினாரா நடிகர் சூரி?
நடிகை மீனாவின் பங்களாவை வாங்கினாரா நடிகர் சூரி?
நடிகர் சூரி, நடிகை மீனாவுக்குச் சொந்தமான பங்களாவை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல காமெடி நடிகர் சூரி. முன்னணி காமெடி நடிகராக உள்ள அவர், சமீபத்தில் மதுரையில் அய்யன், அம்பாள் என்ற பெயர் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்களை தொடங்கினார். இந்த ஓட்டலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
இந்நிலையில் நடிகர் சூரி, பிரபல நடிகை மீனாவுக்குச் சொந்தமான பங்களாவை வாங்கி இருப்பதாக வதந்தி பரவியது. இதுபற்றி சூரியிடம் கேட்டபோது, அது வதந்திதான், உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.