\
நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு
Published on: 

நடிகர் பால சரவணனின் தந்தை ரெங்கநாதன் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையில் ஏழை மக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் பால சரவணனின் அப்பா ரெங்கநாதன் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். 60 வயதாகும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். கடந்த மாதம்தான், பால சரவணனின் தங்கையின் 32 வயதே ஆன கணவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com