குழந்தைகள் மனதை வென்ற கோகோ ஆஸ்கரையும் வென்றது !

குழந்தைகள் மனதை வென்ற கோகோ ஆஸ்கரையும் வென்றது !

குழந்தைகள் மனதை வென்ற கோகோ ஆஸ்கரையும் வென்றது !
Published on

சிறந்த முழு நீள அனிமேஷன் திரைப்படமாக கோகோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

90 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான கோகோ திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  


குழந்தைகள் தங்களை எந்தக் கதாப்பாத்திரமாக வாழ விரும்புகிறார்களோ, அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறுவது போல கோகோ படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கோகோ திரைப்படம் சிறியவர்கள், பெரியவர்களை பெரிதும் கவர்ந்தது.
இத்திரைப்படம் சிறந்த அனிமேஷன் மற்றும் சிறந்த பாடலுக்கான விருதையும் பெற்றது. கோகோ திரைப்படத்தில் “ ரிமம்பர் மீ”என்ற பாடலுக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதில் கோகோவுடன்  தி பாஸ் பேபி, தி ப்ரெட்வினர், பெர்டினாண்ட், மற்றும் லவ்விங் வின்சென்ட் போட்டியில் இருந்தன.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com