\
நாளை வெளியாகும் விக்ரம், ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியின் ’கோப்ரா’ டீசர்!

நாளை வெளியாகும் விக்ரம், ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியின் ’கோப்ரா’ டீசர்!

நாளை வெளியாகும் விக்ரம், ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியின் ’கோப்ரா’ டீசர்!
Published on: 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ டீசர் நாளை வெளியாகிறது.

’டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ வெற்றிப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் இணைந்துளார். இதில், விக்ரம் ஜோடியாக கேஜிஎஃப் பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார்.

சமீபத்தில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து, நாளை படத்தின் டீசர் வெளியாகும் என்று இயக்குநர் அஜன் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். கேஜிஎஃப் படத்தில் குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் சிறப்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார் ஸ்ரீநிதி ஷெட்டி.

நேற்றுதான், அவர் நடிப்பில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், நாளை கோப்ரா டீசர் வெளியாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com