’கோப்ரா’ படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

’கோப்ரா’ படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
’கோப்ரா’ படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது

அஜய் ஞானமுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கியிருந்தார். அதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தார். இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தப் படங்கள். இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றிபெற விக்ரமுடன் மூன்றாவது படமாக ‘கோப்ரா’வில் இணைந்தார் அஜய் ஞானமுத்து.

இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் படப்புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இப்படத்தில்  கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்று கோப்ரா படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com