சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: மரக்கன்றுகளை பரிசளித்து வாழ்த்திய முதல்வர்

சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: மரக்கன்றுகளை பரிசளித்து வாழ்த்திய முதல்வர்
சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: மரக்கன்றுகளை பரிசளித்து வாழ்த்திய முதல்வர்

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சரண்யா, நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஹீரோயினாக இருக்கும்போதும் முன்னணி நடிகையாக இருந்தவர், தற்போதும் அம்மா கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று’படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைத்தது. சரண்யா-பொன்வண்ணன் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் பிரியதர்ஷினி மருத்துவராக உள்ளார். இந்த நிலையில், இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று நடந்த இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டு மணமக்களுக்கு மரக்கன்றுகளை அளித்து வாழ்த்தினார்.

மேலும், இந்தத் திருமணத்தில் கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் சினிமா பிரபல்ங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com