\
ரஜினி படத்தின் ஒளிப்பதிவாளரானார் திருநாவுக்கரசு!

ரஜினி படத்தின் ஒளிப்பதிவாளரானார் திருநாவுக்கரசு!

ரஜினி படத்தின் ஒளிப்பதிவாளரானார் திருநாவுக்கரசு!
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

எந்திரன் 2.ஓ, காலா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் முதல் முறை
ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார் என்பதும், விஜய் சேதுபதி முதல் முறை ரஜினியுடன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்திற்கு தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த தகவலை திருநாவுக்கரசு, அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் ரஜினியின் அடுத்த படத்திற்கு ஒளிப்பதிவு
செய்வதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் சூர்யா நடித்த ‘24’ படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது பெற்றவர். கார்த்திக்
சுப்புராஜின் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த ‘மெர்க்குரி’ படத்திற்கும் திருநாவுக்கரசு தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்தக்
கூட்டணியே தற்போதும் தொடர்கிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com