தமிழ்த் திரை உலகின் மூத்த ஒளிப்பதிவாளர் என்.கே விசுவநாதன் காலமானார். உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்த விசுவநாதனின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டம் என் கையில், மீண்டும் கோகிலா, கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள என்.கே விசுவநாதன், பெரிய மருது, ஜகன் மோகினி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.