கேளிக்கை வரியை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு சினிமா டிக்கெட்டுகளுக்கான கேளிக்கை வரியை உயர்த்தியது. இதனையடுத்து இன்று மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை தேனி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு உயர்த்திய கேளிக்கை வரியை தீபாவளிக்கு முன்னர் வாபஸ் பெறாவிட்டால் மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் டிக்கெட் கட்டண உச்சவரம்பு, திருட்டு டிவிடிக்களை ஒழிப்பது குறித்து தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.