ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர்?
சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியானது ‘ரெட்ரோ’ திரைப்படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலகம் முழுவதும் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இது சூர்யாவின் 45 ஆவது படமாகும்.
இதில் சுவாசிகா, சிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கெனவே மவுனம் பேசியதே, ஆறு திரைப்படங்களில் இணைந்து நடித்த சூர்யா - த்ரிஷா, ஆயுத எழுத்து படத்தில் தனித்தனியாக நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு படத்தை தயாரிக்கிறார்.
இப்படம் இறுதிகட்டப்படப்பிடிப்பை எட்டியுள்ளநிலையில், படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"கருப்பு" என்பதுதான் இப்படத்தின் பெயர். மேலும், இதன் பஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 'கருப்பு' திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.