கூடுதல் தளர்வுகள்: புதுச்சேரியில் தொடங்கிய சினிமா படப்பிடிப்புகள்

கூடுதல் தளர்வுகள்: புதுச்சேரியில் தொடங்கிய சினிமா படப்பிடிப்புகள்

கூடுதல் தளர்வுகள்: புதுச்சேரியில் தொடங்கிய சினிமா படப்பிடிப்புகள்
Published on

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை அருகே இன்று  சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

புதுச்சேரியில்  கொரோனா தொற்று பரவல் அதிகமான காரணத்தினால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதில் சினிமா படப்படிப்புகளும் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்று பாதிப்பு சற்று குறைய தொடங்கியதை அடுத்து மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை  படப்பிடிப்பு புதுச்சேரியில் 100 நபர்களுடன் மட்டும்  நடத்த அனுமதி அளித்தது. இதனை அடுத்து நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்திற்கான காட்சிகள் சில, இன்று காலை முதல் புதுச்சேரி கடற்கரை சாலை அருகே படமாக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் படப்பிடிப்பை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதன் மூலம் புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பை சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com