பற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்
அமேசான் காடுகளின் அழிவு குறித்து விழிப்புணர்வு செய்ய #PrayForAmazon என்ற ஹேஷ்டேக்கை சினிமா பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 16 நாட்களாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் அமேசான் காடு பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 2 வாரங்களுக்கு மேலாக தீப்பற்றி எரியும் அமேசான் காடுகளின் புகைப்படங்களை பார்க்கும்போது மன வேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ வருத்தமளிக்கிறது என பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார். தமிழ் நடிகை சிம்ரன், பூமியில் 20 சதவீத ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகள் எரிவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா பாட், எங்கள் கிரகத்தின் நுரையீரல் எரிகிறது என கவலை தெரிவித்துள்ளார். மேலும், பிரபலங்கள் பலரும் அமேசான் காடு எரிவது தொடர்பாக விழிப்புணர்வை உண்டாக்க #PrayForAmazon என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.