’பீஸ்ட்’-ஐ தொடர்ந்து ஷங்கர்-ராம் சரண் படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்

’பீஸ்ட்’-ஐ தொடர்ந்து ஷங்கர்-ராம் சரண் படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்

’பீஸ்ட்’-ஐ தொடர்ந்து ஷங்கர்-ராம் சரண் படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்
Published on

’பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் - ராம் சரண் படத்தில் இணைந்திருக்கிறார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஜானி மாஸ்டர் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக இருக்கிறார். வைரல் ஹிட் அடித்த ‘ரெளடி பேபி’, ‘புட்ட பொம்மா’, ‘குலேபா குலேபா’ உள்ளிட்டப் பல்வேறு பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

’தனுஷ் 43’ படத்தில் தற்போது பணியாற்றி வரும் ஜானி மாஸ்டர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் நடனம் அமைத்துள்ளார். இந்த நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ராம் சரண் இணையும் படத்திற்கும் நடனம் அமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘பாய்ஸ்’ படத்தில் 500 டான்ஸ்சர்களுடன் நனம் ஆடினேன். ஆனால், இப்போது ஷங்கர்- ராம் சரண் சார் இணையும் படத்திற்கு முதன்மை நடன இயக்குநராக பணியாற்றவிருப்பது நம்பமுடியாததாக இருக்கிறது. என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஷங்கர், ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோருக்கு நன்றிகள்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com