வெளியானது விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைம், தணிக்கைச் சான்றிதழ்

வெளியானது விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைம், தணிக்கைச் சான்றிதழ்
வெளியானது விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைம், தணிக்கைச் சான்றிதழ்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் நேரம் மற்றும் தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் திரையுலகில் அவர் அறிமுகமாகிறார்.

அத்துடன், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, பத்மப்ரியா, ரோஷன் மாத்யூ, கே.எஸ். ரவிக்குமார், பாபு ஆண்டனி, ஷாஜி சென், ரோபோ சங்கர், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், முதலில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடையாததால், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வெகு நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் விக்ரமின் ‘கோப்ரா’ படம் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்தப் படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com