\
“கட்டுமஸ்தான உடல்கட்டு... ஆனாலும் தாத்தாதான்” - விக்ரம் மகளுக்கு பெண் குழந்தை

“கட்டுமஸ்தான உடல்கட்டு... ஆனாலும் தாத்தாதான்” - விக்ரம் மகளுக்கு பெண் குழந்தை

“கட்டுமஸ்தான உடல்கட்டு... ஆனாலும் தாத்தாதான்” - விக்ரம் மகளுக்கு பெண் குழந்தை
Published on

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் விக்ரம் தாத்தாவான மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருந்தபோது வீட்டிலேயே குடும்பத்தினர் சிறிய விழா எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கு நேற்று மதியம் 1 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நடிகர் விக்ரம் தாத்தாவாகியுள்ளார். விக்ரமை பார்க்கும்போது இதை நம்புவது கடினமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் அவர் இப்போது தாத்தாதான்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com