முதன்முறையாக சிரஞ்சீவி - வெங்கடேஷ் கூட்டணி! | Chiranjeevi | Venkatesh
சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கிவரும் தெலுங்கு படம் `மன ஷங்கர் வரப்பிரசாத் காரு'. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்போது இந்தப் படத்தில் வெங்கடேஷ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் `பட்டாஸ்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அனில் ரவிப்புடி, இதுவரை எடுத்த அத்தனை படங்களும் மிகப்பெரிய ஹிட். கடந்த ஆண்டு பொங்கலுக்கு இவர் இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி நடித்த `சங்க்ராந்திக்கி ஒஸ்துன்னாம்' படம் வெளியானது. மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதனை அடுத்து சீரஞ்சீவி நடிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார் அனில் ரவிப்புடி. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் `மீசல பிள்ளா' சமீபத்தில் வெளியானது.
இன்று இப்படத்தில் வெங்கடேஷ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ள படக்குழு. அதற்கான வீடியோவில் படப்பிடிப்புக்கு வெங்கடேஷ் வருவதும், சிரஞ்சீவி அவரை "Venky, welcome, my brother" என அழைப்பதும், பதிலுக்கு வெங்கடேஷ் "“Chiru sir, my boss” என்று சொல்வதுமாக அமைந்திருக்கிறது. இப்படம் அனில் ரவிப்புடி யுனிவர்ஸில் உருவாகிறது. அதனால், `சங்க்ராந்திக்கி ஒஸ்துன்னாம்' படத்தில் வெங்கடேஷ் நடித்த YD Raju பாத்திரம் தான், `மன ஷங்கர் வரப்பிரசாத் காரு' படத்திற்குள் வருகிறது என சொல்லப்படுகிறது. படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 வெளியாக உள்ளது.