''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி

''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி
''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி

மீடூ விவகாரம் குறித்து நீண்ட பதிவை பாடகி சின்மயி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில்
பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பின. தமிழகத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி ட்விட்டரில் புகார் தெரிவித்தார். இந்த
விவகாரம் தமிழகத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது.

சின்மயி புகாரை வைரமுத்து நிராகரித்தார். வேண்டுமென்றே தன்னுடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடப்பதாக கூறியிருந்தார். இதனிடையே, சின்மயி தன் மீதான புகார் குறித்து தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் விளக்கம் அளித்து வந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல நீண்ட ஒரு பதிவை சின்மயி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பலரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிவந்து சொல்லும் எந்த ஆண், பெண், மாற்றுப்பாலின மக்களையும் மனதுநோகும்படி துன்புறுத்தும் அனைவரையும் ஒரு கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com