
பாலிவுட் நடிகர் ஆமீர்கானை வர்த்தக தூதராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூஆ சுன்யிங் வரவேற்றுள்ளார்.
மல்யுத்தப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’தங்கல்’ திரைப்படம் ஆமீர்கான் நடிப்பில் வெளியானது. இத்திரைப் படத்துக்கு சீனாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் தங்கல் திரைப்படத்துக்கு அந்நாட்டு திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, இரு நாட்டு வர்த்தக தூதராக ஆமீர்கானை நியமிக்கவுள்ளதை அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்கிடம் தெரிவிக்கவுள்ளார். இதனை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூஆ சுன்யிங் வரவேற்றுள்ளார். மேலும் ஆமீர்கானின் திரைப்படங்களை தாமும் கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் இரு நாடுகளின் உறவு வலுப்பெறும் என்றார்.