“மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும்...” - கவனம் ஈர்க்கும் ‘கசட தபற’ டீசர்

“மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும்...” - கவனம் ஈர்க்கும் ‘கசட தபற’ டீசர்
“மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும்...” - கவனம் ஈர்க்கும் ‘கசட தபற’ டீசர்

இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரில், ‘நம்ம வாழ்க்கையோட இயக்கத்தை தீர்மானிப்பது இரண்டு அறிவியல் கோட்பாடுகள்தான்...’, ’இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும் தப்பு பண்ணாம மாட்றவங்களும் இருக்கத்தான் செய்வாங்க...’,’இந்த ஊர்ல திறமையில்லாத பணக்காரர்களுக்கு கிடக்கிற வாய்ப்பு திறமையான ஏழைகளுக்கு கிடைக்கிறதில்லை’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

இந்த ஆறு கதைகளில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com