செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை

செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை

செக் மோசடி வழக்கு: பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை
Published on

செக் மோசடி வழக்கில், பிரபல நடிகை கொய்னா மித்ராவுக்கு மும்பை நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பிரபல இந்தி நடிகை கொய்னா மித்ரா. இவர் தமிழில், விக்ரம் நடித்த ’தூள்’ படத்தில் ’அறுவா மீசை’ என்ற பாடலுக்கு ஆடியுள் ளார். மற்றும் சூர்யாவின் ’அயன்’, அஜீத்தின் ’அசல்’ படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர், மும்பை மாடல் பூனம் சேத்திடம் கடந்த 2013 ஆம் ஆண்டு, ரூ. 22 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். அதை திரும்பத் தரவில்லை என்று கூறப்படுகி றது.

இந்நிலையில் கொய்னா மித்ரா அவருக்கு கொடுத்த ரூ. 3 லட்சத்துக்கான காசோலை பணமில்லாததால் திரும்பியது. அதைய டுத்து கொய்னா மீது பூனம் சேத் மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் கொய்னா மித்ராவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. மேலும் 4.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் மீதான புகாரை மறுத்துள்ள கொய்னா மித்ரா, இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com