ஜெயிலர் படத்தோட வசூலை "LEO" பீட் பண்ணும்! சென்னை திரையரங்க உரிமையாளர்களின் கலகலப்பான நேர்காணல்!

நடிகர் விஜயின் லியோ படத்திற்கான ஆடியோ லாஞ்ச் நடத்தாமல் கைவிடப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சென்னையில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்திற்கான எதிர்ப்பார்பு குறித்து பேசியுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பேன் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. வெளியீட்டுக்கு முன்பாகவே படத்தின் வெளியீட்டிற்கான உரிமம் அதிக தொகைக்கு போனது என்றும், நிச்சயம் வசூலில் மற்ற விஜய் படங்களை விட இந்த படம் புதிய மைல்கல்லை எட்டும் என வசூல் குறித்து நிறைய ஆருடங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

விஜய்
விஜய்

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். பொதுவாக விஜய் படத்திற்கு அதிக விளம்பரங்கள் செய்யப்படாமல் போனாலும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுவதும், அவர் சொல்லும் குட்டிக்கதைகளுமே பெரிய விளம்பரத்தையும், அதிக எதிர்ப்பார்ப்பையும் படத்தின் மீது ஏற்படுத்தும். இதனால் இசைவெளியீட்டு விழாவிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரச்னை வந்தாதான் பா அது விஜய் படம்!

லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்துச்செய்யப்பட்டது வசூலை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ரத்தானதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல கேள்விகளும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

விஜய்
விஜய்

என்ன தான் படக்குழு ரசிகர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது, வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை என கூறினாலும் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அனைத்து தடைகளையும் கடந்து நிச்சயம் விஜயின் லியோ திரைப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரசிகர்கள் “பிரச்னை வந்தாதான் பா அது விஜய் படம், நாம்ம ரிலீஸ் அப்போ காட்டலாம்” என ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.

லியோ
லியோ

இந்நிலையில் ஆடியோ லாஞ்ச் ரத்தால் லியோ படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்றும், சமீபத்தில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜெயிலர் படத்தை லியோ பின்னுக்கு தள்ளுமா என்பது குறித்து சென்னையில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் புதியதலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளனர். வீடியோவை முழுமையாக மேலே இணைத்துள்ள லிங்கில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com