
மெர்சல் படத்தின் இரு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவது பாடலான மெர்சல் அரசன் பாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது பாடலான நீதானே... பாடலும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள மெர்சல் அரசன் பாடலின் சில வரிகளை மெர்சல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ’தொட்டு ஸ்டெப்ப வஸ்டா ஆல் சென்ட்ரு அதகளம்தான் ..எட்து கீசி பாத்தா கத்தி ஷார்ப்புதான் " என பாடலின் இரண்டு வரிகளை அவர் வெளியிட்டுள்ளார். இப்பாடல் நாளை இணையத்தில் வெளியாக உள்ளது.
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக நாளை நடைபெற உள்ளது. அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.