\
சென்னைதான் என் வீடு: துல்கர்சல்மான் சந்தோஷம்

சென்னைதான் என் வீடு: துல்கர்சல்மான் சந்தோஷம்

சென்னைதான் என் வீடு: துல்கர்சல்மான் சந்தோஷம்
Published on

சென்னைதான் என் வீடு என்று உரிமையோடு குறிப்பிட்டுள்ளார் நடிகர் துல்கர்சல்மான்.

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான். இளம் பெண்களால் அதிகம் விரும்பப்படும் இளம் நடிகர் இவர். தமிழில் ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும் என இரண்டு படங்கள்தான் இதுவரை அவருக்கு வெளியாகி உள்ளன. அதற்குள் துல்கரின் பெண் ரசிகைகள் அளவு உச்சத்தில் போய் உட்கார்ந்திருக்கிறது. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆனால் சமீபகாலமாக அவர் சென்னையில் இல்லை. 
மலையாள படங்களில் மும்முரமாக உள்ளார். என்ன சென்னையை மறந்து விட்டீர்களா என அவரை ஒரு ஆங்கில நாளிதழ் கேட்டதற்கு ‘சென்னை என் வீட்டை போன்றது. இப்போதும் என் மாமியார், மனைவி அங்குதான் வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்காக கேரளா வந்த பிறகு சென்னையை நான் இழந்திருக்கிறேன். என்ன செய்வது என்னுடைய படப்பிடிப்புகள் முழுக்க கேரளாவில் இருக்கிறது. அவை முடிந்ததும் முதலில் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு அடுத்த நொடியே சென்னைக்கு ஓடி வந்துவிடுவேன்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com