சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை

சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை
சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’ஹீரோ’ படத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்களை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்தவர் ஆர்.டி.ராஜா. அடுத்து மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’ஹீரோ’ படத்தையும் தயாரித்தார். இதற்காக டிஆர்எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு ரூ.10 கோடி கடனாக பெற்றிருந்தாராம் ஆர்.டி.ராஜா. ஆனால் வட்டியையும் அசலையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பணச் சிக்கல் எழுந்ததால், தான் தயாரித்து வந்த ’ஹீரோ’ படத்தை ஆர்.டி.ராஜா, கேஜேஆர் பிலிம்ஸுக்கு அதை கைமாற்றினார். 

தங்களுக்கு தெரியாமல் ’ஹீரோ’ படத்தை வேறு நிறுவனத்திடம் விற்றுவிட்டு, தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ராஜா ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ’ஹீரோ’ உள்பட 24ஏஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ரிலீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம், ’ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்தது. டிசம்பர் 20 தேதி படத்தை வெளியிட 24 ஏஎம் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com