\
விஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்

விஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்

விஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்
Published on

விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சக்ரா. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆனந்தன் இயக்கியுள்ள படத்தின் கதையானது, டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் விஷால் ஒப்பந்தம் செய்து கொண்ட கதை எனக் கூறியும், விஷால் 8.3 கோடியை கொடுக்கவில்லை எனக் கூறியும் அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அவர் முன்னிலையில் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஷாலுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கதையும், சக்ரா படத்தின் ட்ரெய்லரும் சமர்பிக்கப்பட்டது. இதனைப் பார்த்த நீதிபதி சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் செப் 30-க்குள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை செப்டம்பர் 30-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com