\
ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்றம்

ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்றம்

ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்றம்
Published on

ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைகா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 ட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், இன்று உத்தரவு பிறப்பித்தனர். ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. பணத்தை லைகா நிறுவனம் டெபாசிட் செய்தால் மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிடலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com