‘பேட்ட’,‘விஸ்வாசம்’ இரண்டையும் இணையதளங்களில் வெளியிட தடை

‘பேட்ட’,‘விஸ்வாசம்’ இரண்டையும் இணையதளங்களில் வெளியிட தடை

‘பேட்ட’,‘விஸ்வாசம்’ இரண்டையும் இணையதளங்களில் வெளியிட தடை
Published on

‘பேட்ட’,‘விஸ்வாசம்’திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வரவுள்ளன. இந்தப் படங்கள் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள்  தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிஎஸ்என்எல், ரிலையன்ஸ்,   ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட 37 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க  வேண்டும் எனவும், 3 ஆயிரத்து 710 சட்டவிரோத இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், இதேபோன்று கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் உத்தரவின் அடிப்படையில் ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிப்பதாக அறிவித்தார்.

சமீப காலங்களாகவே வெளியாகும் புதுப்படங்கள் அன்றைய தினமே சட்டவிரோதமாக இணையதங்களில் வெளியாகி விடுகின்றன. இதனால் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com