\
கன மழையிலும் விஷாலின் இரும்பு​​த்திரை படப்பிடிப்பு

கன மழையிலும் விஷாலின் இரும்பு​​த்திரை படப்பிடிப்பு

கன மழையிலும் விஷாலின் இரும்பு​​த்திரை படப்பிடிப்பு
Published on

இந்த கன மழையிலும் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


ஒரே சமயத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​​த்திரை ஆகிய படங்களில் நடிகர் விஷால் நடித்து வந்தார்.துப்பறிவாளன் சென்ற வருடமே வெளியாக வேண்டிய படம். இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளிவர வேண்டிய திரைப்படம். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் விஷால் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. 
இதனால் விஷாலுக்கு நஷ்டம்தான். நஷ்டத்தை மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து உள்ளது. தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை ரிச்சி வீதி மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இரும்புத்திரையை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதால் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்ற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஷால் நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கி வரும் இரும்புத்திரை படத்தில் சமந்தா,அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

​                                                                                                        

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com