\
'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்

'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்

'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க விலங்குகள் நல வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா என ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் நாய் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது விலங்குகள் நல வாரியம். 

இதே காரணத்துக்காக கடந்த மாதம் 27ம் தேதியும் விலங்கு நல வாரியம் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்துக்கு NOC வழங்க மறுத்த நிலையில், படக்குழுவினரால் மீண்டும் சமர்பிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதே காரணத்திற்காக மீண்டும் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள். இதே போல் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2, ஜோதிகாவின் 'காற்றின் மொழி' படங்களுக்கும் தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com