2 பழத்துக்கு இவ்வளவு விலையா? வில்லன் நடிகர் அதிர்ச்சி, விசாரணைக்கு உத்தரவு
இரண்டு வாழைப்பழத்துக்கான விலையை பார்த்து, இந்தி நடிகர் ராகுல் போஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர், தமிழில், கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர், இந்தி படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சண்டிகரில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளேன். இரண்டு வாழைப்பழம் கேட்டேன். பழத்துடன் பில் வந்தது. இதை பாருங்கள். இந்த இரண்டு பழங்களின் விலை, ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50. இதற்கு நான் தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை’’ என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.