\
சூர்யா கொடுத்த சுதந்திரம்: ஜோதிகா தகவல்

சூர்யா கொடுத்த சுதந்திரம்: ஜோதிகா தகவல்

சூர்யா கொடுத்த சுதந்திரம்: ஜோதிகா தகவல்
Published on

சூர்யாவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறினார்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இப்போது அவர் நடித்துள்ள ’மகளிர் மட்டும்’ படம், 15-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

பிரம்மா இயக்கியுள்ள இந்தப் படம் பற்றி ஜோதிகா கூறும்போது, ‘ஆணாதிக்கம் கொண்ட சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் வருவது அரிது. இந்தப் படம் அப்படிப்பட்ட படம்தான். ஒரு மருமகள் தனது மாமியார் மற்றும் அவரது தோழிகளை பயணம் ஒன்றில் எப்படி கவனித்துக் கொள்கிறார் என்பதுதான் கதை. இதுவரை சொல்லப்படாத கதை இது. இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். இதில் பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

நான் நடிப்பதற்கு நிறைய கதைகள் வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனக்கு சூர்யா தேவையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com