சினிமா
காதல்னா இப்படியிருக்கணும்: காதலிக்காக கிச்சனில் சாகசம் செய்யும் ஹீரோ
காதல்னா இப்படியிருக்கணும்: காதலிக்காக கிச்சனில் சாகசம் செய்யும் ஹீரோ
காதலியும் வருங்கால மனைவியுமான சமந்தாவுக்காக, நடிகர் நாக சைதன்யா சமையலில் ஈடுபடும் புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தாவும் தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரண்டு பேர் வீட்டிலும் சம்மதம்தெரிவித்ததை அடுத்து விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். திருமண தேதி இன்னும் முடிவு
செய்யப்படவில்லை. இதற்கிடையே ஹைதராபாத் கச்சிபவுலி பகுதியில் சமந்தாவும் நாக சைதன்யாவும் தனியாக வசித்து
வருகின்றனர்.
அங்கு தனது காதலி சமந்தாவுக்காக, நாக சைதன்யா ஸ்பெஷல் உணவு செய்யும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில்
வைரலாக பரவி வருகிறது. பார்பிக்யூ உணவை நாக சைதன்யா சமைப்பதும் அவரை சமந்தா கட்டிப்பிடித்துக்கொண்டு
மகிழ்ச்சியாக போஸ் கொடுப்பதுமான அந்த புகைப்படம் ஏராளமான வரவேற்பை பெற்றுள்ளது.