சினிமா பிரபலங்களின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்: கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ இது வெறும் பழமொழி மட்டுமல்ல தமிழர்களின் நம்பிக்கை. கொரோனா தொற்று காட்டுத்தீ போல பரவி வரும் இன்றைய சூழலில் பிறந்துள்ள இந்த தை மாதம் மக்களின் அனைத்து இடர்களையும் தீர்க்கும் என நம்புவோம். உலகமே இந்த தை பிறப்பை கொண்டாடி வரும் சூழலில் பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் குறித்த புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி உள்ளார். அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் அந்த படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியர், நடிகர் சூரி, சதீஷ், ஹரீஷ் கல்யாண், சமுத்திரக்கனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உட்பட பல பிரபலங்கள் தங்கள் பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.