கேன்சருக்கு சிகிச்சை பெற்றுவருவதாக அறிவித்திருந்தார் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. இவர், ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர். ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயின்.
சமீப காலமாக கேன்சர் நோயின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. சில வகை கேன்சரை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விட முடியும் என்கிறது மருத்துவ உலகம். அதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே சோனாலி பிந்த்ரே போல மேலும் சில சினிமா பிரபலங்கள் கேன்சரில் சிக்கி உயிர் தப்பியிருக்கிறார்கள்.