\
ரசிகர்களின் ஆரவாரத்தில் புதுப்பொலிவுடன் பாட்ஷா

ரசிகர்களின் ஆரவாரத்தில் புதுப்பொலிவுடன் பாட்ஷா

ரசிகர்களின் ஆரவாரத்தில் புதுப்பொலிவுடன் பாட்ஷா
Published on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் புதுப்பொலிவுடன் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது இதனால் சத்யம் சினிமாஸ் ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது.

ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பாட்ஷா. இப்படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் அதை கொண்டாடும் வகையில் மீண்டும் இப்படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று சத்யம் சினிமாஸில் வெளியிடப்பட்டது. பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி 5.1 ஒலி அமைப்புடன், ஏனைய நவீன டிஜிட்டல் தொழில் நட்ப வேலைபாடுகளுடன் இப்படம் நேற்று வெளியிடப்பட்டது.

1995 ஆம் ஆண்டு வெளிவந்த போது ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்கு இணையாக நேற்றும் இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது. படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசிகர்களின் ஆரவாரத்தில் களைகட்டியது பாட்ஷா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com