பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
விஜய்ண்ணா விஜய்ண்ணா என்று நடிகர் விஜயை செல்லமாக அழைத்து அடிக்கடி தங்கள் அன்பைத் தெரிவிக்கும், விஷ்ணு விஷால், சிபி ராஜ், ஜிவி ப்ரகாஷ் ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், பாடலாசிரியர் தாமரை, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அருள்நிதி, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை ஸ்ரேயா, சிம்ரன், காஜல் அகர்வால் என அனைவரும் விஜயின் வெற்றி தொடரவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.