நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்: நடிகை ஹனிரோஸ்!

நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்: நடிகை ஹனிரோஸ்!

நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்: நடிகை ஹனிரோஸ்!
Published on

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் மலையாள சினிமாவிலும் இருக்கிறது என்று நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.

தமிழில், சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உட்பட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். அவர் ’ஒன் பை டூ’ என்ற மலையாள படத்தில்  லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடித்திருந்தார். இது பரபரப்பானது. 

இதுபற்றி அவர் கூறும்போது, ’ அந்தப் படத்தின் இயக்குனர் அருண்குமார் அரவிந்த் முன்கூட்டியே அந்தக் காட்சி பற்றி கூறவில்லை. கதைக்கு அது முக்கியமாக இருந்ததால் நானும் மறுக்கவில்லை. ஆனால், அந்தப் புகைப்படங்களை பப்சிட்டிக்காக அவர் பயன்படுத்தியதைதான் என் னால் ஏற்க முடியவில்லை. அது வேதனையாக இருந்தது.

இனி அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருப்பேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி கேட்கிறார்கள். அது மலையாள சினிமாவிலும் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும், ஏற்காததும் நம் கையில்தான் இருக்கிறது. நடிக்க வரும் புதிதில் அனைவருமே போராட வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் சிலர் மூளைச்சலவை செய்வார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருப்பதால் எனக்கு அந்த அனுபவம் ஏதும் வரவில்லை’ என்கிறார் ஹனி ரோஸ்.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com