நடிகர் விஷால்
நடிகர் விஷால்PT

நடிகர் விஷால் குறித்து அவதூறு.. யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்குப் பதிவு!

நடிகர் விஷால் மீது அவதூறு பரப்பியதாக யூடியூப் சேனல்கள் மீதும், யூடியூபர் மீதும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

சமீபத்தில் விஷால் நடித்து வெளியான "மதகஜராஜா" திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால் மது மற்றும் மாது ஆகியோருக்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர், யூட்யூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய Kings wood News, Youtamil Oodaruppu ஆகிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நடவடிக்கை..

நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில், யூட்யூபர் சேகுவேரா மீதும், Kings wood News, Youtamil Oodaruppu ஆகிய யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com