சினிமா
நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களை அழகிப் போட்டிகளுக்கு தயார் செய்யும் பயிற்சி நிறுவனத்தை, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடத்தி வருகிறார். தன் மீது அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல்நிலையத்தில் ஜோ மைக்கேல் புகார் அளித்திருந்தார்.
அதில், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா மிதுன் மீது நடிகைகள் ஷனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.