\
muthukumaran
muthukumaranmuthukumaran @ instagram

பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு.. மகளிர் போலீஸார் நடவடிக்கை!

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: 
Summary

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, பொய்யான திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது கடந்த 16ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் புகாரளித்தார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்து ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார். தன்னுடன் வாழ சம்மதித்தால் தாலி கட்ட வேண்டும், இல்லை என்றால் பத்தாண்டு சிறை செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். "69 BNS - பொய்யான திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்ளுதல்" என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

muthukumaran
‘ராமாயணா பார்ட் 1’ ஒரு அஜெண்டா படம்.. சாபம் வாங்கிய ராவணன் நல்லவனா? எழுந்த விமர்சனம்!