சம்பள பாக்கி: நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது புகார்

சம்பள பாக்கி: நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது புகார்

சம்பள பாக்கி: நடிகர் ஜெயம் ரவி மேலாளர் மீது புகார்
Published on

பாதுகாவலர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கா‌மல்‌‌ மோசடி செய்துவிட்டதா‌‌க, நடிகர் ஜெயம் ரவியின் மேலாளர் மீது கா‌வல் நிலையத்தில் பு‌கார் அளிக்கப்பட்டுள்ளது‌.

சென்னையில் உள்ள நடிகர் ஜெயம்ரவியின் அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரையும் திடீரென ஜெயம்ரவி வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. 4 மாதங்களாகியும் சம்பள பாக்கி தராததால் அது குறித்து செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இரண்டு பேருக்கு தரவேண்டிய சம்பளம் ரூ. 70 ஆயிரம் ‌‌ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில் ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரியை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com