சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு

சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு
Published on

நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட மலையாள நடிகர் இன்னோசென்ட் மீது மகளிர் தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தற்போதுள்ள நடிகைகள் சிலர்,‘சினிமா வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைத்ததாக’ பகிரங்கமாக பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்
மலையாள நடிகரும், மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ அமைப்பின் தலைவருமான இன்னொசென்ட் பேட்டி ஒன்றில் கூறிய கருத்து தற்போது பெரும் சர்ச்சையாகி
உள்ளது. மோசமான பெண்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கேட்டு படுக்கை வரை செல்வதாகவும், மலையாள திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளை படுக்கைக்கு
அழைக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். நடிகைகளை படுக்கைக்கு அழைத்ததாக எந்த புகாரும் நடிகர் சங்கத்துக்கு இதுவரை வரவில்லை
என்றும் இன்னொசென்ட் பேட்டியில் தெரிவித்திருந்தார். இவரது கருத்து மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகைகள் குறித்து தரக்குறைவாக
பேசியதாக அவருக்கு எதிராக சில நடிகைகள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சில
நடிகைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் கேரள மகளிர் ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com