பத்மாவதி படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்பே படத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.