\
'சுவாதி கொலை வழக்கு' திரைப்பட இயக்குனர் மீது வழக்கு பதிவு

'சுவாதி கொலை வழக்கு' திரைப்பட இயக்குனர் மீது வழக்கு பதிவு

'சுவாதி கொலை வழக்கு' திரைப்பட இயக்குனர் மீது வழக்கு பதிவு
Published on

சுவாதி கொலை வழக்கு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் செல்வன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தொடர்பாக தம்மிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி சுவாதியின் தந்தை சந்தானகோபால கிருஷ்ணன் காவல் துறை  தலைவரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ட்ரெய்லர் வெளியிட  மத்திய திரைப்பட தணிக்கை துறையிடம் உரிய சான்றிதழ் பெறப்படவில்லை என்று படக்குழுவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்தாண்டு ஜூன் 24ல் கொலை செய்யப்பட்டார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com