\
சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக ஆர்யா மீது வழக்கு

சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக ஆர்யா மீது வழக்கு

சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக ஆர்யா மீது வழக்கு
Published on

'அவன் இவன்' திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அவன் இவன்'. இதில் நடிகர்கள் ஆர்யா, விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஜமீன் தொடர்பான காட்சிகளும் இடம்பெறும். இந்நிலையில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நெல்லை அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வரும் 28 ஆம் தேதி நடிகர் ஆர்யா ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com