‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் மீது வழக்கு!

‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் மீது வழக்கு!

‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் மீது வழக்கு!
Published on

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ‘சொடக்கு’ பாடலில் சில வரிகளை நீக்கக்கோரி வழக்குக் தொடரப்பட்டுள்ளது

சூர்யா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் வரும் ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் மற்றும் மணி அமுதன் ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடாலில் வரும் "விரட்டி விரட்டி வெளுக்க தோணுது அதிகார திமிரை" என்ற வரிகளை நீக்கக்கோரி வழக்கு
 தொடரப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் சதீஷ்குமார் தொடர்ந்து இவ்வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்குடன் பாடல் வரிகள் அமைக்கபட்டுள்ளதால், இதன்மூலம் பிரச்னை ஏற்படாத வகையில் தடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com