சினிமா
வரி ஏய்ப்பு புகார்: நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக உத்தரவு
வரி ஏய்ப்பு புகார்: நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக உத்தரவு
வெளிநாட்டு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு நடந்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி நடிகை சுஷ்மிதா சென் கடந்த 2005 ஆம் ஆண்டு போலியாக கணக்கு சமர்பித்து சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காரின் இறக்குமதியாளர்கள் வரியை செலுத்தி விட்டதால், தன்னை விடுவிக்க சுஷ்மிதா தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. அதை பதிவு செய்த நீதிபதி, செப்டம்பர் 18 ஆம் தேதி சுஷ்மிதா சென் ஆஜராகும்படி உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினமே சுஷ்மிதாவிடம் சாட்சி விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.