‘கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - டிராகனுடன் மோதும் ஆர்யா

‘கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - டிராகனுடன் மோதும் ஆர்யா
‘கேப்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - டிராகனுடன் மோதும் ஆர்யா

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும், ‘கேப்டன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழில் வெளியான ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். பிரபல ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களை அடிப்பைடையாக எடுத்துக்கொண்டு, தமிழில் திரைப்படங்களை உருவாக்கி வெற்றி அடைந்து வருகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அந்த வகையில், தற்போது ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தை அவர் இயக்குகிறார்.

ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ‘மிருதன்’ திரைப்படத்தில் ஜாம்பி, ‘டிக் டிக் டிக்’ படத்தில் விண்வெளிப்பயணம் என வித்தியாசமான கதைக் களத்தை கையாண்ட சக்தி சௌந்தர்ராஜன், ‘கேப்டன்’ படத்தில் வித்தியாசமான விலங்கு கொண்ட கதையை கையில் எடுத்துள்ளார். இதில் ஆர்யா ராணுவ வீரனாக நடித்தாலும், அந்த டிராகனுக்கும், அவருக்குமான தேடலே படத்தின் மையக்கரு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஆர்யா மற்றும் டிராகன் இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதனால் சக்தி சௌந்தர்ராஜனின் முந்தைய படங்கள் போலவே, இந்த திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிராகன் கதாபாத்திரத்தை உருவாக்க ஒரு வருடம் உழைத்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். ஆர்யாவின் தி ஷோ பீபிள் நிறுவனமும், திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஜுனில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com