சினிமாவில் இருந்து விலகினார் ஹாலிவுட் ஹீரோயின் கேமருன் டயஸ்!
சினிமாவில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை கேமருன் டயஸ். 16 வயதில் மாடலிங் துறைக்கு வந்த டயஸ், ’தி மாஸ்க்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங், சார்லிஸ் ஏஞ்சல்ஸ், கேங்ஸ் ஆப் நியூயார்க், ஷ்ரக், த ஹாலிடே, மைனாரிட்டி ரிப்போர்ட், த அதர் வுமன், செக்ஸ் டேப் உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், கடந்த மூன்று வருடமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட டயஸ், 2015-ம் ஆண்டு இசைக் கலைஞர் பெஞ்சமின் மேடனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக டயஸ் சினிமாவில் இருந்து அவர் விலகுவதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘நான் ஏற்கனவே ரிடையர்ட் ஆகிவிட்டேன்’ என்றார்