"கடவுள் முருகன் கருணையால் நாங்கள் தப்பித்தோம்" - புதிய தலைமுறைக்கு குஷ்பு பேட்டி

"கடவுள் முருகன் கருணையால் நாங்கள் தப்பித்தோம்" - புதிய தலைமுறைக்கு குஷ்பு பேட்டி
"கடவுள் முருகன் கருணையால் நாங்கள் தப்பித்தோம்" - புதிய தலைமுறைக்கு குஷ்பு பேட்டி

செங்கல்பட்டு அருகே குஷ்பு சென்ற கார் மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய நடிகை குஷ்பு, கடவுள் முருகன் தான் தங்களை காப்பாற்றியதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசும் போது “ ஒரு கண்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் கண்ணாடி உடைந்திருக்கிறது. எங்களுக்கு எந்தக் காயமும் இல்லை. வேல் யாத்திரைக்காக கடலூர் சென்று கொண்டிருக்கிறோம். அந்த முருகன்தான் எங்களை காப்பாற்றி இருக்கிறார். என் கணவர் வணங்குகின்ற தெய்வம் எங்களை கைவிடவில்லை. கடவுள் புண்ணியத்தில் நாங்கள் தப்பித்துள்ளோம்.” என்றார்.

இதன்பிறகு வேல் யாத்திரையை தொடர்கிறீர்களாக என்று கேட்டபோது “ கடவுள் முருகனே என்னை சந்தித்துவிட்டு செல் என்று கூறிய பின்னர் நாங்கள் ஏன் நிற்கப் போகிறோம்” என்றார்.

அவரது ட்விட்டர் பக்கத்திலும் அவர் இது தொடர்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்ட நிலையில், மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com